பாஸ்(எ)பாஸ்கரன்-சுடச்சுட விமர்சனம்!

ஆயா வடை சுட்ட கதைய புதுசா சொல்லி இருக்காங்க.. (அவங்க மட்டும்தான் காமெடி பண்ணனுமா?).

கோ‌வி‌ல்‌ நகரமா‌ன கும்‌பகோ‌ணத்‌தி‌ல்‌ ஆர்‌யா‌, அவருடை‌ ய அம்‌மா‌, அண்‌ணன்‌, தங்‌கை‌யு‌டன்‌ வா‌ழ்‌ந்‌து வருகி‌றா‌ர்‌. ஆர்‌யா‌வி‌ன்‌ அண்‌ணன்‌ சரவணன்‌ வெ‌ட்‌னரி‌ டா‌க்‌டரா‌க வே‌லை‌ பா‌ர்‌க்‌கி‌றா‌ர்‌. ஆர்‌யா‌ டி‌கி‌ரி‌ முடி‌க்‌கனும்‌னு அரி‌யர்‌ கி‌ளி‌யர்‌ பண்‌ண முயற்‌சி‌ செ‌ய்‌து செ‌ய்‌து செ‌ய்‌துகி‌ட்‌டே‌ இருக்‌கி‌றவர்‌. அப்‌படி‌ ஒரு நா‌ள்‌ அரி‌யர்‌ எக்‌ஸா‌ம்‌ எழுத போ‌கும்‌ போ‌து பஸ்‌ஸி‌ல்‌ நயன்‌தா‌ரா‌வை‌ பா‌ர்‌க்‌கி‌றா‌ர்‌. பா‌ர்‌த்‌தவு‌டன்‌ அவருக்‌கு பி‌டி‌த்‌து போ‌கி‌றது.

இந்‌த நி‌லை‌யி‌ல்‌ ஆர்‌யா‌வி‌ன்‌ அண்‌ணனுக்‌கும்‌ வி‌ஜயலட்‌சுமி‌க்‌கும்‌ தி‌ருமணம்‌ முடி‌வா‌கி‌றது. வி‌ஜயலட்‌சுமி‌யி‌ன்‌ தங்‌கைதா‌ன்‌‌ நயன்‌தா‌ரா‌ என்‌று ஆர்‌யா‌வு‌க்‌கு தெ‌ரி‌ய வர, சந்‌தோ‌ஷம்‌ அதி‌கமா‌கி‌றது. நயன்‌தா‌ரா‌வை‌ அடி‌க்‌கடி‌ சந்‌தி‌ப்‌பதும்‌, அவரது நி‌னை‌வா‌க இருப்‌பதுமா‌க இருப்‌பவருக்‌கு இது பெ‌ரி‌ய வா‌ய்‌ப்‌பா‌க அமை‌கி‌றது. அவரி‌டம்‌ தி‌ருமணம்‌ பற்‌றி‌ பே‌சுகி‌றா‌ர்‌. அதற்‌கு நயன்‌தா‌ரா‌, என்‌ அக்‌கா‌வி‌டம்‌ அதை‌ப்‌ பற்‌றி‌ பே‌சு என்‌கி‌றா‌ர்‌. ஆரி‌யா‌ வி‌ஜயலட்‌சுமி‌யி‌டம்‌ நயன்‌தா‌ரா‌ பற்‌றி‌ய வி‌ஷயங்‌களை‌ சொ‌ல்‌ல, வி‌ஜயலட்‌சுமி‌ கோ‌பமா‌கி‌றா‌ர்‌.

முதலி‌ல்‌ வே‌லை‌க்‌கு செ‌ன்‌று கை‌ நி‌றை‌ய சம்‌பா‌ரி‌த்‌து உன்‌ தங்‌கை‌யை‌ தி‌ருமணம் செ‌ய்‌து கொ‌டு, அடுத்‌து உன்‌ தி‌ருமணம்‌ பற்‌றி‌ பே‌சு என்‌று ஆரி‌யா‌வி‌டம்‌‌ சொ‌ல்‌ல, நா‌ன்‌ சம்‌பா‌தி‌த்‌து கா‌ட்‌டுகி‌றே‌ன்‌ என்‌று வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு வெ‌ளி‌யே‌றுகி‌றா‌ர்‌ ஆர்‌யா‌.

சந்‌தா‌னத்‌தி‌ன்‌ உதவி‌யோ‌டு, டுடோ‌ரி‌யல்‌ செ‌ன்‌‌டர்‌ வை‌த்‌து உயர்‌கி‌றா‌ர்‌. நயன்‌தா‌ரா‌ சொ‌ன்‌னது போ‌ல தங்‌கை‌யி‌ன்‌ தி‌ருமணத்‌தை‌ முடி‌த்‌து வை‌த்‌து, தனது தி‌ருமணம்‌ பற்‌றி‌ பே‌ச, அதற்‌கு நயன்‌தா‌ரா‌வி‌ன்‌ தந்‌தை‌ மறுப்‌பதோ‌டு, ஒரு பி‌ரபல பி‌ஸி‌னஸ்‌மே‌ன்‌ மகனுக்‌கு நயன்‌தா‌ரா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுக்‌க முடி‌வு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. நயன்‌தா‌ரா‌வை‌ எப்‌படி‌ ஆர்யா‌ கை‌ பி‌டி‌க்‌கி‌றா‌ர்‌ என்‌பது கி‌ளை‌மா‌க்‌ஸ்‌.

பார்த்தீங்களா எவ்ளோ சீரியஸான கதை, ஆனா நீங்களே படத்துல பீல் பண்ணனும்னு நினைச்சாலும் சிரிச்சுட்டுதான் இருப்பீங்க காரணம் படத்தை முழு காமெடி படமா எடுத்திருக்கார், ராஜேஷ்.எம்.

பா‌ஸ்‌ (எ) பா‌ஸ்‌கரனா‌க, ஆர்‌யா‌ டீ‌ன் ஏஜ்‌ வயதி‌ன்‌ சுட்‌டி‌தனத்‌தை‌, இளை‌ஞர்‌ பருவம்‌ வரை‌ கடை‌பி‌டி‌த்‌து ஊரி‌லும்‌, வீ‌ட்‌டி‌லும்‌ வெ‌ட்‌டி‌ பை‌யனா‌க பே‌ர்‌ எடுக்‌கும்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ கனக்‌கச்‌சி‌தமா‌க பொ‌ருந்‌தி‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவருடை‌ய டை‌மி‌ங்‌ ரி‌யா‌க்‌ஷன்‌ஸ்‌ படத்‌தி‌ற்‌கு மி‌கப்‌பெ‌ரி‌ய பலமா‌க அமை‌ந்‌து, கை‌தட்‌டலை‌ அள்‌ளுகி‌றா‌ர்‌. படம்‌ முழுக்‌க ஜீ‌‌ன்‌ஸ்‌ பே‌ன்‌ட்‌, சட்‌டை‌ என அசத்‌தலா‌ன அழகி‌ல்‌ வலம்‌ வந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவர்‌ கூலி‌ங்‌ கி‌ளா‌ஸ்‌ மா‌ட்‌டுவதும்‌, கழட்‌டுவதும்‌ என தன்‌னுடை‌ய ஒவ்‌வொ‌ரு மே‌னரி‌சத்‌தி‌லும்‌ கதை‌யி‌ன்‌ நகை‌ச்‌சுவை‌ பா‌தி‌ப்‌பு‌ இருப்‌பதா‌ல்‌. நல்‌ல முத்‌தி‌ரை‌யா‌ன நடி‌ப்‌பை கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ ஆர்‌யா‌.

நயன்‌தா‌ரா‌வு‌ம்‌ தன்‌னுடை‌ய கதா‌பா‌த்‌தி‌ரத்‌தை‌ சி‌றப்‌பா‌க செ‌ய்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சீ‌ரி‌யஸா‌க ஆர்‌யா‌வு‌க்‌கு அட்‌வை‌ஸ்‌ செ‌ய்‌வது. ஆர்‌யா‌ தன்‌னை‌ இம்‌ப்‌ரஸ்‌ பண்‌ண வரும்‌ போ‌தெ‌ல்‌லா‌ம்‌ அவரை‌ அணுகும்‌ முறை‌யி‌ல்‌ அசத்‌தல்‌. கோ‌பமா‌க பே‌சும்‌போ‌து கா‌மெ‌டி‌ வரனும்‌ என்‌ற படத்‌தி‌ன்‌ கா‌ன்‌செ‌ப்டி‌ல்‌ கச்‌சி‌தமா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

இந்த படத்தில் ஹீரோவுக்கு இனையான வேடம் சந்தானத்திற்கு ஆரி‌யா‌வி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌கொ‌ண்‌டு படா‌த பா‌டு படும்‌ சந்‌தா‌னத்‌தி‌ன்‌ கா‌மெ‌டி‌யி‌ல்‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ சி‌ரி‌ப்‌பு‌ மழை‌. அவரி‌ன்‌ டை‌மி‌ங்‌ செ‌ன்‌ஸ்‌க்‌கு ஒவ்‌வொ‌ரு முறை‌யு‌ம்‌ கை‌தட்‌டலா‌ல்‌ தி‌யே‌ட்‌டர்‌ அதி‌ர்‌கி‌றது. படம்‌ முழுக்‌க வரும்‌ அவர்‌ படத்‌தி‌ன்‌ மி‌கப்‌பெ‌ரி‌ய பலம்‌ என்‌று சொ‌ல்‌லலா‌ம்‌. நகை‌ச்‌சுவை‌ நண்‌பன்‌டா‌

ஆர்‌யா‌வி‌ன்‌ அண்‌ணன்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ சுப்‌பு‌ பஞ்‌சுவு‌ம்‌ நகை‌ச்‌சுவை‌யி‌ல்‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவருடை‌ய எதா‌ர்‌த்‌த நடி‌ப்‌பு‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ வி‌சி‌ல்‌ சத்‌தம்‌. அவரது மனை‌வி‌யா‌க வி‌ஜயலட்‌சுமி‌ அசத்‌தா‌ல நடி‌ப்‌பு.

வட்‌டி‌க்‌கு வி‌டும்‌ நா‌ன்‌ கடவு‌ள்‌ இதி‌ல்‌ கா‌மெ‌டி‌யி‌ல்‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரது மகனா‌க வரும்‌ அஸ்‌வி‌ன்‌ரா‌ஜ்,‌ கதை‌யி‌ல்‌ முக்‌கி‌யமா‌ன ஒரு கதா‌பா‌த்‌தி‌ரம்‌. சா‌ப்‌பி‌டுவதும்‌ தூ‌ங்‌கி‌ வழி‌வதுமா‌க இருக்‌கும்‌ அவர்‌, படி‌ப்‌பதற்‌கா‌க முயற்‌சி‌ செ‌ய்‌கி‌ற கா‌ட்‌சி‌களி‌ர்‌ சி‌ரி‌ப்‌பு‌ வெ‌டி‌.

கெ‌ளரவ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ இரண்‌டு கா‌ட்‌சி‌களி‌ல்‌ நடி‌த்‌து மனதி‌ல்‌ நி‌ன்‌று வி‌டுகி‌றா‌ர்‌ ஜீ‌வா‌. நயன்‌தா‌ரா‌ தந்‌தை‌யா‌க வரும்‌ சி‌த்‌ரா‌ லட்‌சுமணன்‌, ஆர்‌யா‌ தா‌யக வரும்‌ லஷ்‌மி‌ ரா‌மகி‌ருஷ்‌ணன்‌ என படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ அனை‌‌வரது கதா‌பா‌த்‌தி‌ரமும்‌ படத்‌தி‌ன்‌ பலம்‌. அனை‌‌வரும்‌ தங்‌கள்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தை‌ நி‌றை‌வா‌க‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌.

யு‌வன்‌ சங்‌கர்‌ ரா‌ஜா‌ இசை‌யி‌ல்‌ யா‌ர்‌ இந்‌த பெ‌ண்‌தா‌ன்‌… பா‌டல்‌ எல்‌லோ‌ரை‌யு‌ம்‌ முனுமுனுக்‌க வை‌க்‌கும்‌ பா‌டல்‌. மற்‌ற பா‌டல்‌கள்‌ கே‌ட்‌கும்‌ ரகம்‌. பி‌ன்‌னணி‌ இசை‌யி‌லும்‌ மி‌ரட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. சி‌ல இடங்‌களி‌ல்‌ பழை‌ய படத்‌தி‌ன இசை‌யை‌ கா‌ட்‌சி‌க்‌கு பொ‌ருத்‌தமா‌க தந்‌தி‌ருப்‌பது நல்‌ல ரசனை‌.

கும்‌பகோ‌ணத்தி‌ல்‌ வா‌ழ்‌ந்‌துவி‌ட்‌டு வந்‌த தி‌ருப்‌தி‌யை‌ சக்‌தி‌ சரவணனி‌ன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ உணர்‌த்‌துகி‌றது. ஒவ்‌வொ‌ரு பா‌டல் ‌கா‌ட்‌சி‌யி‌லும்‌ ரசி‌க்‌க வை‌க்‌கி‌ன்‌ற பே‌க்‌ட்‌ரா‌ப்‌ கலரி‌ல்‌ பி‌ரே‌ம்‌களி‌ல்‌ அசத்‌தல்‌ ரசனை‌.

முழுக்‌க முழுக்‌க சி‌ரி‌க்‌க வை‌க்‌க எடுத்‌தி‌ருக்‌கும்‌ முயற்‌சி‌யி‌ல்‌ ஜெ‌யி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ ரா‌ஜே‌ஷ்.எம்‌‌. அழகா‌ன கா‌தல்‌ கதை‌யை‌ குடும்‌ப உறவு‌கள்‌, நட்‌பு‌ வட்‌டா‌ரம்‌ என சுற்‌றி‌ கா‌மெ‌டி‌ இழை‌யா‌ல்‌ பி‌ண்‌ணி‌ ரசி‌கர்‌களை‌ வயி‌று வலி‌க்‌க சி‌ரி‌க்‌க வை‌த்‌து வெ‌ற்‌றி‌யை‌ பெ‌ற்‌றி‌ருக்‌கும்‌ ரா‌ஜே‌ஷை‌ பா‌ரா‌ட்‌டா‌மல்‌ இருக்‌க முடி‌யா‌து. இவர்‌ ஏற்‌கனவே‌ இயக்‌கி‌ய சி‌வா‌ மனசுல சக்‌தி‌யை‌ வி‌ட இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌‌ அதி‌கமா‌கவே‌ இருக்‌கி‌றது.

பா‌ஸ்‌ (எ) பா‌ஸ்‌கரன்‌ – அட்வான்ஸ் தீபாவளி

Thanks to www.narumugai.com

அழிந்த பைல்களை மீளப்பெறுவது எப்படி

தற்செயலாகவோ நிரந்தரமாகவோ நாம் நிறைய முக்கியமான கோப்புக்களை இழந்து தவிப்பதுண்டு.உண்மையில் இத்தகு கோப்புக்களை மீளப்பெறும் தேவை வரும்போது மீட்க முடியாமல் தவித்த சந்தர்ப்பங்கள் நம்மில் பலருக்கும் உண்டு..

இங்கே நான் தரும் இரண்டு மென்பொருட்களும் மிகப்பெறுமதியானவை..இலவசமானவை (இரண்டாவது தகவல் தினமலர் வெளியீடு)

(01)
அழிந்தவற்றை பெற கீழ் கண்ட தளத்திற்கு சென்று பாருங்கள்.
www.recovermyfiles.com

(02)

எத்தனை முறை பைல்களைக் கையாளும் விதம் குறித்தும் அவற்றை அழிக்கும் முன் எச்சரிக்கையாகச் செயல்படுங்கள் என்று எழுதினாலும் பல வாசகர்கள் தாங்கள் தெரியாமல் ஒரு சில பைல்களை அழித்துவிட்டோம்; எப்படியாவது அவற்றைப் பெற உதவிடுங்கள் என்று கடிதங்கள் எழுதுகின்றனர்.

இந்த மலரில் அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவிடும் புரோகிராம்கள் குறித்து பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.


சில வாரங்களுக்கு முன் ரெகுவா என்று ஒரு அழித்த பைல்களை மீட்டுத் தரும் புரோகிராம் பற்றி எழுதி இருந்தோம். இதோ இன்னொரு பயனுள்ள புரோகிராம்:


டிஸ்க் டிக்கர் (Disk Digger) கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.

மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.

ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.


அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக ("dig deep") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.

அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.


இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.

இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற http://dmitrybrant.com/diskdigger என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி:தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.

உங்கள் செல்போனின் தரத்தைப்பரிசீலிக்க இதோ இலகு வழி

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும்.

அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் தரம் குறைந்த பொருள் கொண்டு உருவாக்கப்பட்டது மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான செல்போன்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றிகள் :ரிதன்யா

எங்கள் இணைய இணைப்பு வேகத்தை அதிகரிக்க..

நம்மில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று இணையத்தள இணைப்பின் ஆமை வேகம்..படு துரிதமாக வேலை செய்து கொண்டிருக்கும் நமக்கு இத்தகு குறை வேகம் சங்கடத்தையும் எரிச்சலையும் கொடுக்கக்கூடும்..அதனால் உங்கள் இணைப்பின் வேகத்தை அதிகரிக்க ஒரு எளிய வழியை பகிர்கிறேன்

(01)

முதலில் உங்கள் இணைய இணைப்பு சேவை வழங்குநர் குறிப்பிட்டுள்ள வேகத்தை பரிசோதிக்கவும் (அவர்களது விளம்பரத்திலோ இணைய இணைப்பு மென்பொருளிலோ இதனைக்காணலாம்)

(02)
உங்கள் அணைய இணைப்பின் உண்மையான வேகத்தை www.speedtest.net or Speakeasy.net ஆகிய இணையத்தளங்களின் உதவியுடன் பரீட்சிக்கவும் (மேற்படி இணையத்தளங்கள் தரிசிக்கும்போது அது தரும் வழிகாட்டல்களை பின்பற்றவும்)

(03)
முதலாவது இணைப்பு வேகத்தையும் இரண்டாவது இணைப்பு வேகத்தையும் ஒப்பிடவும்.வேறுபாடு தென்படின் நான்காவது படிக்குச்செல்லவும்

(04)

இப்போது உங்கள் வெப் பிரவுசரின் (இணைய உலவி) "எட் -ஒன்ஸ்" (Ad-Ons) இல் தேவையற்றவைகளை Disable பண்ணிவிடவும் (அநேகமாக எல்லாவற்றையுமம் Disable பண்ணுவது நல்லது)இதற்கு tools - Manage ad-one ஐ சொடுக்கவும்

(05)

இபபோது anti-virus, adware, spyware, and malware ஆகியவைகளை ஸ்கேன் பண்ண விடவும்.

(06)

டிஸ்க் க்ளீன் அப் ,Disk Defragmenter செய்யவும்

(07)

TCP Optimizer software டவுண்லோட் செய்து கணணியை optimize பண்ணவும்

Link:-

http://www.download.com/SG-TCP-Optimizer/3000-2155_4-10488572.html?tag=lst-1 or at PCWORLD: http://www.pcworld.com/downloads/file/fid,68524-order,1-page,1/description.html


(08)

கணணியை ரீ-ஸ்டாரட் பண்ணிவிட்டு மீண்டும் இணைய வேகத்தை பரிசீலிக்கவும்

800 மடங்கு வேகத்தில் பதிவிறக்கம் செய்ய பதினைந்து இலவச மென்பொருட்கள்

நnமெல்லோருமே இணையத்தளத்தில் ஏராளமான விடயங்களை பதிவிறக்கம் செய்து வரகிறோம்..நமது இணைய இணைப்பின் வேகம் , மென்பொருளின் அளவு என்பவைகளால் அடிக்கடி பதிவிறக்க வேகம் குறைவடைந்து நமக்கு எரிச்சலூட்டுவது தினமும் நிகழ்வதுதான்..

இங்கே நான் தரும் பதினைந்து மென்பொருட்களுமே மிகச்சிறப்பாக பதிவிறக்கக்கூடிய இலவச மென்பொருட்களே..

நேரச்சருக்கம் கருதி விளக்கங்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன (காரணம் சில தொழிநுட்பச்சொற்களை மொழிபெயர்ப்பதிலுள்ள சிரமம்)

கண்டிப்பாக அனைவரக்கும் பயனுள்ள சுட்டிகளே இவைகள்...

Fast (some sources claim speeds 50% faster than built-in download managers) and easy to use download manager. Free software.

http://www.connectfusion.com/

Includes proxy support, a scheduler, an ability to follow redirects, a free space management gauge, an auto shutdown feature, and integration with Internet Explorer, FirefoxFirefox , OperaOpera , Netscape, Mozilla, Avant, and Maxthon. Freeware.

http://www.tensons.com/

Powerful app with advanced tools you won’t find anywhere else, like a file shredder and a cookie/history/temp cleaner. Also integrates with Internet Explorer, Firefox, Opera, Netscape, and Mozilla. Freeware (ad-supported).

http://www.speedbit.com/

Nice multithreaded manager with Internet Explorer integration. Freeware.

http://www.heitmeijer.nl/downloadcommander.aspx

Powerful manager with support for sequences of files, multiple locations, and site spidering. Also supports the MMS and RTSP media protocols and the BitTorrent and eDonkey P2P protocols. Integrates into Firefox, Opera, Mozilla, SeaMonkey, Netscape, Avant, and Maxthon. Freeware.

http://www.blippr.com/apps/392322-FlashGet

Basic program with speeds up to 800% faster than built-in download managers. Freeware (ad-supported).

http://download.cnet.com/Free-Download-Accelerator/3000-2071_4-10293460.html?tag=lst-1-5

A scheduler, clipboard monitor, antivirus scanning, proxy support, ZIP extractor, and integration into Internet Explorer, Firefox, Opera, Netscape, Avant, Maxthon, and Slim Browser are just a few of the features packed into this manager. Freeware.

http://www.freshdevices.com/freshdown.html

Easy to use download manager that works with Internet Explorer. Freeware

http://www.thirdglobe.com/index.php

Not only does it support the standard HTTP(S) and (S)FTP protocols, it supports the MMS, RTSP, and PNM streaming media protocols and the eDonkey and BitTorrent P2P protocols. Plus, it integrates with Internet Explorer, Firefox, and Opera. Freeware.

http://www.net-xfer.com/default.htm

Social site downloading is the main appeal of this program. It supports HTTP(S), FTP, Metalink, RTSP, PNM, MMS, NSS, RTMP, embedded video from sites like YouTube, music from sites like PandoraPandora , and files from sites like RapidshareRapidshare . It works with Internet Explorer, Firefox, Opera, Netscape, and Maxthon. Freeware.

http://www.orbitdownloader.com/

A simple manager with support for features such as file sorting. Freeware.

http://www.moogsoftware.com/download%20software.html

HTTP/FTP support, proxy support, and ZIP previewing are available with this great app. Internet Explorer, Firefox, and Mozilla integration provided. Free software.

http://francis.dupont.free.fr/truedownloader/

A minimalistic app that does a great job. Integrates with Internet Explorer. Free software.

http://download.cnet.com/WackGet/3000-2071_4-10537007.html?tag=lst-1-7

Another Wget (see below) front-end, with features such as clipboard monitoring, threaded downloading, job exporting, predefined user agents, ASP/PHPPHP redirection, multiple FTP file and folder downloading, and bit rate limit. Free software.

http://www.cybershade.us/winwget/

Fast manager with drag ‘n’ drop, multithreading, batch downloading, and much more. Freeware.

www.yadaware.com




வாழ்க வளமுடன்

பதிவு பிடித்திருப்பின் ஒரு ஓட்டு போடலாமே...

கவிஞர் நா.முத்துக்குமார் - நவீன தமிழ்க்கவிஞன்

அண்மைக்காலமாக பாடல் துறையிலும் கவிதைத்துறையிலும் தனன்கென முத்திரை பதிக்கும் ஒரு அழகான கவிஞனைப்பற்றி நான் படித்தவைகளை இங்கு பகிர்கிறேன்..

தீயோடு தோன்றுக!


1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

ஆழம் அறி!

எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க...

உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!

கோபம் கற்றுணர்!

பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.

உன் திசை உற்றுணர்!

காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.

அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.

கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.

எரிக்க எரிக்க எழுந்து வா!

இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

*

மூலம் : ஆனந்த விகடன்

.....................................................................................

அமரர் சுஜாதா நேரடியாக பாராட்டிய முத்துக்குமாரின் கவிதை ஒன்று...

தூர்
—-

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க


..........................................................

முத்துக்குமாரின் கவிதை ஒன்றை டிஸ்கியாக தருகிறேன்

அதிகமாக இலக்கியம் பேசினால் அடிக்க வருவார்களோ என்று பயந்து, கபாலியிடம் அவனுக்குப் பிடித்த புதுக் கவிதை கேட்டேன்:

அண்ணலும் லுக்கினான்
அவளும் லுக்கினாள்
அவனும் விஸ்கினான்
அவளும் விக்கினாள்
செம்புலப்பெயல் நீருடன்
ஜோடா கலக்க
ஆங்கே பிறப்பான்
அடுத்த இந்தியக் குடிமகன்


சிறப்பு நன்றிகள் - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

((தொடரும்))

PDF பைல்களை இலவசமாக WORD பைலுக்கு மாற்ற சில இலகு வழிகள்

இணையத்தளத்தில் நமக்கு தேவையான ஏராளமான ஆவணங்கள் பிடி எப் வடிவிலேயே கிடைக்கின்றது..அவைகளை நாம் நினைத்தாற்போல வடிவமைக்கவோ திருத்தங்களை மேற்கொள்ளவோ முடிவதில்லை.இணையத்தளத்தில் இதனை வேர்ட் பைலுக்கு மாற்றும் நிறைய கொன்வேர்ட்டர்கள் பணத்தக்கும் நிபந்தனை அடிப்படையிலுமே கிடைக்கின்றது.இதனால் நாமெல்லோரும் பல சிரமங்களை எதிர்நோக்கியிருப்போம்..

சில கொன்வேர்ட்டர்கள் அட்டவணைகள்,வரைபடங்கள் போன்றவற்றை சரியாக கொன்வேர்ட் பண்ணாது.இதுவும் நமக்கு பல வேளைகளில் பிரச்சினையாக அமைவதுண்டு.

இங்கே நான் அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் இலவசமாக ஆன்லைன் மூலம் மிகக்குறைந்த வினாடிகளில் சிறப்பாக அட்டவகைணகள் உட்பட கொன்வேரட் பண்ணித்தருகிறது.

ஈதோ அதன் சுட்டி


இது தவிர

சுட்டி 01
சுட்டி 02
சுட்டி 03

தகவல் பயனுள்ளதெனில் மறக்காமல் ஒரு ஓட்டு போடவும்..

Related Posts with Thumbnails

YOUTUBE TOP VIDEO

எனது வலைப்பதிவு பட்டியல்