எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் 'தப்பர்த்தம்'

எல்லாமே சந்தர்ப்பம்

கற்பிக்கும்
'தப்பர்த்தம்'

மிக
அண்மையில் நாடோடிகள் திரப்படத்திலிருந்து ஹரிஹரன் பாடிய ஒரு காதல்
பாடலைக்கெட்க நேர்ந்தது…இப்பாடலை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் லோஷனுக்கு
சிறப்பு நன்றிகள்…ரொம்ப நாட்களுக்குப்பிறகு அற்புதமான ஒரு பாடலாக
உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடலை இரவு நேரத்தில் தனிமையில்
கேட்டுப்பாருங்கள்….



உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவம் வலியது

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு..
அவனில்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இதற்குள் எறும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்

யார் காரணம் ? யார் காரணம் ?
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல..
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம்தானே..

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.


மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாளே..
அலையலையாக ஆசைகள் எழும்ப அவ
ள் வசம் விழுந்தானே
நதிவழி போனால் கரைவரக்கூடும் விதிவழி போனானே..
விதையொன்று போட வேறொன்று முளைத்த கதையென்று ஆனானே
என் சொல்வது..???என் சொல்வது ?
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப்போலே நட்பைக்காத்தான்..
காதல் தோற்கும் என்றா பார்த்தான்..


உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails

YOUTUBE TOP VIDEO

எனது வலைப்பதிவு பட்டியல்