Facebook Badge
அர்த்தமில்லாத அவஸ்தைகள்

உனது
கண்ணீரில்
நனைந்து போனது
எனது மனசு
இருவரதும்
இறுக்கத்தை
அதிகப்படுத்தும்
அல்லது
குறைக்கும்
நம் மௌனங்கள்
கண்ணீரிலா முடிய வேண்டும்?
தனிமையில்
நம் பிரிவின் வலிகளில்
நான் வடிக்கும்
கவிதைகளில்
நிறையவே பொதிந்து
கிடக்கின்றன
சில கண்ணீர்த்துளிகளும்
சில இரத்தத்துளிகளும்
நினைவுகளை
பின்னோக்கி
நகர்த்திவிட்டு
இனி ஒரு போதும்
நிகழ முடியாத
அந்த நாட்களில்
புதைந்து கிடக்கிறேன்
வசந்த கால
இலைச் சருகின்
முனகலும்
மயான வெளியில்
பறவைகளின்
அலறலும்
சிந்தனையின்
வெற்றிடத்தை
நிரப்பிக் கொண்டிருக்கின்றன
நீ பற்றிய
ஞாபகங்கள்
நொந்துபோன மனசின் பரப்புகளில்
அர்த்தமில்லாத அவஸ்தைகளாய்
கனக்கின்றன
ஒரே ஒரு கேள்வி
அகால மரணமாய்
திடீரெனச் செத்துப்போனதே
நம் உறவு
எப்படி
நேர்ந்தது
அது?
- நிந்தவூர் ஷிப்லி -
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
YOUTUBE TOP VIDEO
ஷிப்லியின் கவிதைகள்
எனது வலைப்பதிவு பட்டியல்
-
-
வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் - வலைச்சரத்தில் வெற்றிகரமாக ஆறாம் நாள் பதிவர்களுடன் வந்து விட்டேன் ! இதுவரை அதிகம் இங்கு பேசப்படாத பதிவர்கள் , அவர் தம் பதிவுகள் வேண்டும் என்றே , தேடி தே...11 ஆண்டுகள் முன்பு
-
Rewarding Life - *"If you want your life to be more rewarding, you have to change the way you think."* * - Oprah Winfrey*13 ஆண்டுகள் முன்பு
-
உன்னுடன் வாழ்கிறேன்.. - அவனது கண்கள் நடைப்பழகாத இரு குழந்தைகள் என்னை காணாத அந்த ஒரு நிமிடம்.. என்னுள் இருக்கும் உன்னோடு சேர்ந்து மிதந்து போகிறேன் மேகமாய்.. என்னுடன் நான் உணர்...15 ஆண்டுகள் முன்பு
-
-
-
-
-
-
-

3 கருத்துகள்:
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
FINE
this is nice
கருத்துரையிடுக