இணையத்தள இலக்கியங்களில் இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் வகிபங்கு

இணையத்தள இலக்கியங்களில் இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் வகிபங்கு

இன்றைய தகவல்தொழிநுட்ப யுகப்புரட்சிக்காலத்தில் உலகமே ஒரு கிராமமாக மாறிக்கொண்டிருப்பது மனிதர்களின் வேலைகளையும் தகவல் பரிமாற்றத்தையும் நொடிப்பொழுதில் நிகழ்த்தி முடிக்கும் சாத்தியத்தை விதைத்திருக்கிறது.பணப்பரிமாற்றமஇ; வங்கி நடவடிக்கைகள்இகடிதத்தொடர்புகள்இநூலகங்கள்இகல்வி நடவடிக்கைகளஇ; பொழுதுபோக்குகள்இசினிமாஇஇலக்கியமஇ;மருத்துவம் என்று தகவல் தொழிநுட்பச்செயற்பாடுகள் இன்றையமனித வாழ்வின் அத்தனை விடயங்களிலும் தனது வேர்களை ஆழப்பதித்திருக்கிறது.

இலக்கியத்தைப்பொறுத்தவரை தற்போது ஏராளமான இணையத்தளங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான இலக்கிய ஆக்கங்கள் தினந்தோறும்அரங்கேறியவண்ணமுள்ளன.
இதில் தமிழ் இலக்கியச்செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றன.இந்தியாஇகனடாஇஅவுஸ்திரேலியாஇஇலங்கைஇசுவிஸ் என்று தமிழ் மக்கள் வாழுமிடங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் வழியே தமிழ் இலக்கியத்தின் கூறுகள் வியாபித்துக்கிடக்கின்றன.தமிழ் இலக்கியச்செயற்பாடுகளில் தமிழ் பேசும் தமிழர்களைப்போலவே தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமது பங்களிப்பை அதிகளவில் ஈடுபடுத்தி வருவது காலங்காலமாக நிகழும் ஒரு விடயமாகும்.அந்த வகையில் இணையத்தள தமிழ் இலக்கிய செயற்பாடுகளிலும் முஸ்லிம் இளைஞர்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.ஆயினும் இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் இணையத்தள இலக்கிய செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் திருப்தி தருவதாயில்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.அந்த வகையிலேயே எனதிந்த ஆய்வின் நோக்கமாக இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் இணையத்தள இலக்கியங்களில் குறைந்தளவான ஈடுபாட்டை கொண்டிருப்பதற்கான காரணிகளை இனங்காண்பதும் அத்தகு காரணிகளை களைவதற்கான ஆரம்ப கட்ட செயற்றிட்டங்களை வரையறுத்தலுமாகும்.

ஆய்வுப்பிரச்சினையாக நான் இனங்கண்ட ஒரு விடயம் யாதெனில் இலக்கியச்செயற்பாடுகளான கவிதை கட்டுரை நாவல் சிறுகதை ஹைக்கூ போன்றவைகளை பிரஸ்தாபிக்க இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் பத்திரிகை சஞ்சிகைகள் சிறு சஞ்சிகைகள் மற்றும் நூல் முயற்சிகளையே அதிகளவில் கையாள்கின்றனர்.அவைகள் சென்றடையும் பரப்பு குறுகியதாகவே இருக்கிறது.ஆயினும் அதிகளவான வாசகர்களையும் விரைவான பரிமாற்றல் சக்தியையும் கொண்டியங்கும் இணையத்தளங்களின் வழியாக தங்களது இலக்கியப்படைப்புக்களை வெளியிட அவர்கள் அதிகளவில் முயற்சிகள் மேற்கொள்வதில்லை.அது ஏன்?இத்தகைய தடைக்காரணிகளை இனங்கண்டு வினைத்தறனான முறையில் நிவர்த்திக்கும் வழி மூலங்களை இனங்காண்பது காலத்தின் தேவையாக காணப்படுகிறது.

ஆய்வு முறையாக நேர்காணல் முறையை பிரயோகித்துள்ளேன்.குறைந்தது முப்பது முஸ்லிம் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை திட்டமிட்ட நேர்காணல் மூலம் இத்தகைய இணையத்தள இலக்கிய செயற்பாடுகளில் பின்தங்கக்காரணமான அம்சங்களையும் அறிவுறுத்தல்களையும் பட்டியலிடவுள்ளேன்.

எது எவ்வாறெனினும் தமிழ் இலக்கியச்செயற்பாடுகளில் இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடும் பட்சத்தில் கலாச்சார மொழி ரீதியாக ஏராளமான உள்ளுறைந்துள்ள அழகியல் அம்சங்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் சக்திவாய்ந்த வழிமுறையை விரைவில் அமுல்படுத்தும்பட்சத்தில் தமிழ் இலக்கியச்செயற்பாடுகள் காலப்போக்கில் மேலும் செம்மையுறும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails

YOUTUBE TOP VIDEO

எனது வலைப்பதிவு பட்டியல்