உன்னை அத்தனை சுலபத்தில் மறந்து விட முடியவில்லை..

(இது கவிதை அல்ல என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விடுவது நல்லது)






நீ..............
என்னுயிர்த்தோழியாய்
சில காலம் என்னை
சிறை செய்த பொன்மகள்..

எப்படி மறப்பேன் உன்னை..
உன் குறும்பை..
உன் பிரார்த்தனையை..

என் மீதான
உனது அக்கறைகளில்
அடிக்கடி நெகிழச்செய்வாய்
மறக்கவே சாத்தியமற்ற ஒரே ஒருத்தி
என் வாழ்வில் நீ மட்டும்தான்...!

முகம் பார்த்ததில்லை
ஆயினும் என்ன..???
உண்மை அன்பு
முகம் பார்த்தா வரும்...???

உன் திருமணத்தில்
நான்தான் மாப்பிள்ளைத்தோழன்
என்று நான் சொல்லும் வார்த்தைகள்
நிரந்தரப்பொய்தானோ யானறியேன்
தோழியே....

உனது நண்பிகள்
எல்லோரும்
எனக்கும் நண்பிகளாயிருந்த
அந்த வசந்த நிமிடங்கள்
இனியெங்கே மீளப்போகின்றன..???

எனது சுக துக்கங்களில் நீயும்...
உனது சுக துக்கங்களில் நானும்..
நனைந்திருந்த காலங்களில்
எப்படி தீ விழுந்ததோ தெரியவில்லை..

வாழ்வின் கடைசி நுனி வரைக்கும்
நண்பர்களாய் இருப்போம் என்று
நமக்குள் நாமே எடுத்துக்கொண்ட சபதமும்
கேள்விக்குறுதிதான் இல்லையா..???

நிறையப்பேசினோம்
விடிய விடிய
இருள இருள..

சந்தேகக்கோடுகள் கிடையாது
தப்பான எண்ணங்களும் கிடையாது
சகோதரியாய்
நண்பியாய்
பெறாமகளாய்
அன்னையாய்
நீ ஏற்றுக்கொண்ட பாத்திரங்கள்
என் நெஞ்சை விட்டு அகலவேயில்லை
அகலப்போவதுமில்லை தோழியே...

தோழமையின் ஊஞ்சலில்
திகட்ட திகட்ட
நாம் ஆடிய சந்தோச ஆட்டங்கள்
சடுதியாய் அறுந்து விழுமென்று
எந்த அசரீரியும் எனக்குச்சொல்லவில்லை

யார் கண் பட்டதோ...
திடீரென உன்னைச்சூழ்ந்த
எல்லா உறவுகளும் எதிர்பாரா கணமொன்றில்
எப்படியோ நின்று போனது..
உனது நண்பிகளைத்தொடர்பு கொண்டு
உனது நிலையை அறிய விளைந்தேன்
அது கூட முடியவில்லை..

உனது ஊருக்கும்
அண்மையில் வேறொரு பணியாக
சென்று வந்தேன்..
அங்கிருந்த ஒவ்வொரு வினாடிகளும்
உன்னைப்பிரிந்த வலியை
என் மீது எறிந்து கொண்டேயிருந்தது...

எத்தனை காலம்
தனிமையில் அழுதிருப்பேன் தெரியுமா...?

என்ன செய்வது..??
இறைவனை வலிமையாக ஏற்றுக்கொண்ட நாம்
இறை நீதிகளையும்
அவன் எழுத்துக்களையும்
நம்பி ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்..??

உனக்கு எத்தகைய நிர்ப்பந்தமோ
எனக்குத்தெரியவில்லை..
உனது நீண்ட மௌனத்தில்
உன்னை கோபிக்கவோ
உனனை மறந்து விடவோ முடியாது..

வாழ்க்கைப்பயணம்
சிக்கலானது..
நிகழ்வதும்
நிகழ்ந்ததும்
நிகழப்போவதும்
நமது கட்டுப்பாட்டில் இல்லை..

யார் யாருடனோ
எப்படி எப்படியெல்லாமோ
வாழ்க்கைப்பயணம் நகரும் நிகழும் நின்று போகும்..

யாரோ எதிர்பாராமல் வருவதும்
யாரோ எதிர்பாராமல் பிரிவதும்
இயல்பாகிப்போன வாழ்க்கை இது..

எத்தனையோ பிரிவுகள் நிகழ்ந்தாலும்
அத்தனையும் போல உன்னை
அத்தனை சுலபத்தில் மறந்து விட முடியவில்லை..

பிரிவு நிகழ்ந்தபோது
திடமாகத்தான் இருந்தேன்..
காலம் செல்லச்செல்ல
யாரையும் இட்டு நிரப்ப முடியாத
ஒரு அங்கமாய் நீ என்னுள்
நிறைந்திருந்ததை பிறகுதான் புரிந்து கொண்டேன்...

எது எப்படியோ
மீண்டும் நாம் முன்பு போல
அன்பாகப்பழகும் காலம்
திரும்பி நிகழப்போவதில்லை
என்று நினைக்கிறேன்..

உனக்காக இன்னும் பிரார்த்திக்கிறேன்..
உனக்கு வரப்போகும் அல்லது வந்திருக்கும்
கணவன் உன் மனம்போல அமைய வேண்டும்
அது போதும் எனக்கு...

உன்னோடு பேசும் நாள்
வரலாம்
வராமலும் போகலாம்..
எதிர்பார்ப்பு கொஞ்சமேனும் இருக்கத்தான் செய்கிறது..

வருடங்கள் உருள்கின்றன..

பார்க்கலாம் என்ன நிகழும்
என்று..

உன் நினைவுகளுடன்
தொடர்ந்தும் துடிக்கும் என்னிதயம்
பிரார்த்திக்கொண்டேயிருக்கிறது..

உன் மனம் போலவே
எல்லாம் அமையும்..

ஆசிர்வதிக்கிறேன் நண்பியே.




நிந்தவூர் ஷிப்லி

2 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

அருமை ஷிப்லி...

Unknown சொன்னது…

kalakiteenga...

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails

YOUTUBE TOP VIDEO

எனது வலைப்பதிவு பட்டியல்