மீண்டெழுந்த சிறீசாந்த்த் - இப்ப இவன் ரொம்ப நல்லவன் பா
சிறீசாந்த்
18 மாதம் தாண்டி அணிக்குள் இடம்பிடித்தவன்
இன்று எல்லோர் மனங்களிலும் ஆழத்தடம் பதித்தவன்
வீசுகிறான் பந்துவீச்சு
இலங்கை மானம் காற்றில் போச்சு
துல்லியமாய் எறிகையிலே - பந்து
எறிகணையாய் பொறிகிறதே
முன்பு கோபப்பார்வை பார்ப்பானே
இன்று புன்னகை முகமாய் பூத்தானே..
விக்கெட்கள் எத்தனை வீழ்கையிலும்
இவன் முகத்தில் தெரிவது தன்னடக்கம்
என் தேசம் தோற்றுப்போனாலும்
இவன் திறமைக்கு வைப்பேன் முதல் வணக்கம்
ஆர் பி சிங்கும் சர்மாவும்
இனி போகலாம் நேரே பர்மாதான்..
தம்பி முகத்தில் தெரியும் பணிவினிலே
இவன் வெற்றிகளெல்லாம் அருகினிலே..
உலகக்கிண்ணப்போட்டிகளில்
அரை - இறுதிக்கு இந்தியா பேருறுதி
அதை இறுதிக்கு நகர்த்தி கிண்ணம்பெற
தம்பி உழைப்பான் இது என் நாவுறுதி..
1 கருத்துகள்:
Hi shibly591,
Congrats!
Your story titled 'மீண்டெழுந்த சிறீசாந்த்த் - இப்ப இவன் ரொம்ப நல்லவன் பா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 27th November 2009 11:56:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/144623
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
கருத்துரையிடுக