தோல்வியின் விளிம்பில் இலங்கை கிரிக்கெட் அணி

சிறீசாந்தை எதற்காக இந்திய அணியில் மீண்டும் இணைத்தார்கள் என்பதற்கு மிகச்சிறந்த பதிலை சிறீசாந்த் வழங்pக்கொண்டிருக்கிறார்..

ஆம்

ஐந்து விக்கெட்டுக்கள்

அபார களத்தடுப்புஸ

பழைய பந்தாக்களே இல்லை

ஹர்பஜனுடனும் சகஜ பேச்சு (!) என்று புத்தம்புதிய சிறீசாந்த் அவதாரத்தால் நட்டம் இலங்கை அணிக்குத்தான்..

இன்றைய மூன்றாம் நாளிலேN விளங்கிவிட்டது இலங்கையின் இன்னிங்ஸ் தோல்வி

சங்கக்காரவின் அணிக்கு அதிர்ஸ்டம் இல்லை..காரணம் முதல் இரண்டு நாட்களும் சீரான பாதையாக இருந்த மைதானம் இன்றைய மூன்றாவது நாளில் தனது தன்மையை முற்றிலும் இழந்து பந்துவீச்சாளர்களின் சொர்க்காபுரியாகிவிட்டது

413 என்பது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய ஓட்ட இடைவெளி..தவிர போலோ ஒள் செய்யச்சொல்லி இச்தியா இலங்கையை பணித்திருப்பது டெஸ்ட் வரலாற்றில் இது ஐந்தாவது தடவை..

இருப்பது இன்னும் இரண்டரை நாட்கள்.கைவசம் ஒன்பது விக்கெட்கள்..(இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது..) 390 ஓட்ட இடைவெளி..

இதையெல்லாம் பார்க்கும் போது அடுத்த டெஸ்டில் இலங்கை வென்றால்தான் போட்டியை சமப்படுத்த முடியும்..இல்லையேல் இரண்டாமிடத்திலுள்ள இலங்கை 3 4 5 என்று தடுமாறக்கூடும்..

எதற்கும் வானிலை அவதானத்தைக்கேட்டுவிட்டு இம்முடிவில் மாற்றமிருந்தால் அறிவிக்கிறேன்..

இந்தப்போட்டியின் நாயகர்கள் இந்தியர்கள் அல்ல...இலங்கை வீரர்கள்தான்..பொறுப்பற்ற துடுப்பாட்டம் மோசமான களத்தடுப்பு மாற்றமில்லாத பந்து வீச்சு என்று இந்தியர்களுக்கு நாயக அந்தஸ்தை தாரை வார்த்ததால் இலங்கையர்களே "டம்மி" நாயகர்கள்..

வரலாறு எப்பத்தான் மாறுமோ???????

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Hi shibly591,

Congrats!

Your story titled 'தோல்வியின் விளிம்பில் இலங்கை கிரிக்கெட் அணி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th November 2009 04:16:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/144493

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails

YOUTUBE TOP VIDEO

எனது வலைப்பதிவு பட்டியல்