அங்காடித்தெருவும் சில நுண்ணுணர்வுகளும்



ஞாயிறு விடுமுறை நாள் என்ன பண்ணலாம் என்று யோசித்தபோது அங்காடித்தெரு திரைப்படத்தை பார்த்து விடலாம் என்று தோன்றியது..இலங்கையின் கொன்கோட் திரையரங்கில் தான் நான் பிதாமகனும் பார்த்ததால் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை கொன்கோட்டில் பார்ப்பது ஏமாற்றம் தராது என்றெண்ணி காலைக்காட்சிக்குப்போனால்...ஆங்காங்கே சில பழுத்த தலைகளும் பல காதல் ஜோடிகளின் முத்தக்காட்சிகளும் (திருட்டுத்தனமா பார்த்தேனுங்க) என் கண்ணில் படவே வந்தது வீணோ என்று அலுத்துப்போய்விட்டேன்.ஆகாலும் படம் தொடங்கியது முதல் முடியும் வரை ஏகாந்த இருளில் ஆந்தையின் அலறலைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவனாக உறைந்து போய்விட்டேன்.
 ஆஹா...என்னே ஒரு கலைப்படைப்பு..
அடிமட்ட மக்களின் உணர்வகளையும் காதலையும் உணர்வபூர்வமாக வடித்துச்செதுக்கியிருக்கிறார்கள்.புதுமுகம் மகேஷை விட கற்றது தமிழ் அஞ்சலி நடிப்பில் பிய்த்து உதறுகிறார்.அவரது முகபாவங்கள் பிரமிப்பூட்டுகின்றன.

இட்ட மொழி எனும் கிராமத்தில் தகப்பனை இழந்து குடும்பச்சுமையின் காரணமாக என்ஜினியரிங் படிப்பை தொடராமல் சேல்ஸ்மேன் வேலைக்கு தன் நண்பனுடன்(கனாக்காணும் காலங்கள் பாண்டி) ரங்கநாதன் தெருவிலுள்ள ஆடைக்கடைக்கு சேல்ஸ்மேனாக வேலைக்கு வருகிறான் லிங்கு (மகேஸ்).அங்கே அவனது தயர வாழ்க்கை,பிற ஏழைகளின் கண்ணீர்க்கதைகள்,சக ஊழியர்களின் சோகப்பின்னணிகள்,காதல்,பிரிவு,உறவின் Pத்தமான அன்பைப்பிரியும் போதான ரணங்கள் என்று எங்கு தொட்டாலும் வசந்தபாலனின் முத்திரை முத்திரை முத்திரை
அடித்தட்டு மக்களுக்கும் காதல் வரும்..அது எத்தகைய ஆழமானதாக இருக்கும் என்பதை இவ்வளவு அழுத்தமானதாக வலிமையானதாக அழத்தூண்டும் விதமானதாக படம்பிடித்திருக்கிறார்கள்.கடைசியில் அவர்களது காதலுக்கு என்ன நடக்கிறது என்பதை கண்டிப்பாக நீங்கள் திரயில் மட்டுமே பாருங்கள்.அப்போதுதான் அந்த உணர்வை சரியாக உள்ளீர்க்க முடியும்.
 வறுமையில் உழலும் சராசரிக்கும் குறைவான இளைஞர்களின் வாழ்வு படம் பார்ப்பவர்களை சில நாட்களேனும் உலுக்கி எடுக்கும்.
 படத்தில் பாண்டியின் நகைச்சுவைகள் ரசிக்க வைக்கின்றன.அவரது காதலிக்காக அவர் கவிதை எழுத துடிப்படும் கடவுள் வாழ்த்தை கவிதையாக மாற்றுவதும் செம ஜாலி.
 படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தும் பின்னணி இசை ஒத்துழைக்கவில்லை.பாடல்கள் அத்தனையும் அற்புதம்.நா.முத்துக்குமாரின் வரிகளில் எல்லாப்பாடல்களுமோ உணர்வுபூர்வமானவை."பூமியின் மடியில் ஏழைகள் ஜனனம்"இறைவன் படைப்பில் பிழையில்லயா?"என்கிற அவரது கேள்விக்கு விடைதான் இன்னும் கிடைத்தபாடில்லை.
 படத்தில் ரசிக்க வைப்பவை

மகேஸ்
அஞ்சலியின் நடிப்பு
கருங்காலி
பாண்டி
பாடல்கள்
ஒளிப்பதிவு
வசனம்
இயக்கம்

படத்தில் உறுத்த வைப்பவை

சந்று இழுவையான உணர்ச்சிக்கோப்பு
நாடகத்தனம்
பின்னணி இசை

மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு தான் ஒரு வசந்தமயமான இயக்குநர் "வசந்தபாலன்"என்று நிரூபித்திருக்கிறார.அய்யா..உங்க கிட்ட இருந்து இன்னும் நிறய எதிர்பார்க்கிறோம்..


தொடருங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails

YOUTUBE TOP VIDEO

எனது வலைப்பதிவு பட்டியல்