Facebook Badge
பயனுள்ள மென்பொருட்கள் சில ! இலவசம் இலவசம் இலவசம்
உபயோகமான மென்பொருள்கள்
நம்மிடம் சில பழைய சி.டி.க்களில் சில பாடல்கள் மட்டுமே இருக்கும். அவற்றை எல்லாம் எம்.பி.3 ஆக மாற்றினால் நமக்கு ஒரே சி.டி.யில் கிட்டத்தட்ட 150 பாடல்கள் வரை பதிவு செய்து விடலாம். பல சி.டி.க்களில் இருக்கும் பாடல்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரே சி.டி.யில் பதிவு செய்ய சிடெக்ஸ்(CDex) என்கிற மென்பொருளை உபயோகிக்கலாம்.
பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி:
http://cdexos.sourceforge.net/downloads.php
மென்பொருளின் அளவு: சுமார் 2 MB
---------------------------------------------------------
நம் கணினி திடீர் என்று இயங்க மறுத்தால் "Ctrl+Alt+Del"-கீகளை உபயோகித்து 'டாஸ்க் மேனேஜர்' திரையை வரவழைப்போம். தோன்றும் திரையில் எத்தனை அப்ளிகேஷன்கள் இயக்கத்தில் உள்ளன - அவற்றில் எத்தனை இயங்காமல் உள்ளன என்பதை மட்டும்தான் நம்மால் காண முடியும். அதே அப்ளிகேஷன்கள் எந்த இடத்தில் உள்ளன? அவை ஏன் திறந்து வைக்கப்பட்டுள்ளன? அவற்றின் செயல்பாடுகள் என்னவென்பதை அறிந்து கொள்ளவேண்டுமென்றால் பிராசசர் எக்ஸ்புளோரர் மென்பொருளை பதிவிறக்கிக்கொள்ளலாம். டாஸ்க் மேனேஜராக செயல்படும் இந்த மென்பொருள் தேவையற்ற, இயங்க மறுக்கும் அப்ளிகேஷன்களை இயக்கத்திலிருந்து எளிமையாக நீக்கிவிடும்.
மென்பொருளின் பெயர்: Processor Explorer
மென்பொருளின் அளவு : சுமார் 270 KB
பதிவிறக்கம் செய்ய செல்ல வேண்டிய தளம்: http://www.sysinternals.com/ntw2k/f...e/procexp.shtml
---------------------------------------------------------
இ-ப்ராம்ப்டர்
ஒருவரே பல மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருப்போம். அஞ்சலைக் காண ஒவ்வொரு முறையும் "லாகின்" செய்து பின்னர் காண வேண்டியதிருக்கும். அதுவும் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் செல்ல தனித்தனியே (உதாரணமாக யாஹ?வுக்கு ஒரு முறை ... ஹாட்மெயிலுக்கு ஒரு முறை... என்று) பயனாளர் பெயர், கடவுச்சொல் கொடுத்து செல்ல வேண்டியதிருக்கும். அதற்கு மாற்றாக இ-ப்ராம்ப்டர் என்கிற இலவச மென்பொருளை நிறுவிக்கொண்டோம் என்றால், இணையத் தொடர்பில் இருக்கும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை, தானாகவே புதிய அஞ்சல்கள் வந்திருக்கிறதா என்பதை சோதித்து அறிவிக்கும். ஒருமுறை மட்டும் என்ன என்ன மின்னஞ்சல்கள் வைத்திருக்கிறோம் என்பதையும், கடவுச்சொல் என்ன என்பதையும் கான்?பிகர் செய்ய வேண்டும்.
இதன் மேலும் ஒரு சிறப்பு அம்சம் அஞ்சல்களை இதிலேயே படிக்க முடியும்! தேவையில்லாததை நீக்க முடியும்.
ஒரு சிறிய குறை - கீழ்க்கண்ட மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களுக்கு மட்டுமே இது பயன்படும்.
Yahoo
Altavista
Go
Hotmail
Mail.com
Netscape
Onebox
Rediffmail
USA.com
USA.net
Lycos
Juno
Switchboard
AOL
eMail.com
POP3
பதிவிறக்கி உபயோகிக்க விரும்புபவர்கள் சுட்டியைத் தட்டவும்.
http://www.eprompter.com
__________________________________________________________
ஸ்ட்ரோக் இட் (StokeIt)
இந்த இலவச மென்பொருளின் மூலம் mouse-ஐ கொண்டே சில குறிகளை வரைவதன் மூலம் 80 வகையான கட்டளைகளை நாம் பிறப்பிக்கலாம். அதன் மூலம் எக்ஸ்புளோரர், விண் ஜிப் போன்றவற்றை இயக்கலாம். உபயோகிக்க மிக எளிதாக உள்ளது.
தேவைப்படுபவர்கள் http://www.tcbmi.com/strokeit/downloads.shtml என்கிற சுட்டியில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். இந்த மென்பொருள் தனி நபர் பயன்பாட்டுக்கு மட்டுமே இலவசம் என்பதை அறியவும்.
__________________
நன்றிகள் :- தமிழ்மன்றம் பாரதி
YOUTUBE TOP VIDEO
ஷிப்லியின் கவிதைகள்
எனது வலைப்பதிவு பட்டியல்
-
Google வேண்டாம் - Perplexity.ai போதும்?! - சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கோபைலட் போன்ற செயற்கை நுண்ணறிவு (சுருக்கமாக செய்யறிவு) chatbot-களுக்கு போட்டியாக perplexity.ai வந்து மக்கள் மனதை கவர்ந்த...1 மாதம் முன்பு
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல் - பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக வந்தால்..அப்பட...1 ஆண்டு முன்பு
-
கிறுக்கல்கள் - நீ தத்தி தத்தி வந்து தங்கமுலாம் பூசவே ஏங்கி தவித்து கொண்டிருக்கிறது நம் வீட்டு சுவர்கள்!..4 ஆண்டுகள் முன்பு
-
நேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு? - அஜித் ஏன் திடீர்னு ரிமேக் பண்ணாருனு ஒரு சந்தேகம் வந்துச்சு. [image: Image result for nerkonda paarvai] சந்தேகத்த சுக்குநூறு ஆக்கி தனது சமூக பார்வையை நேர்கொ...4 ஆண்டுகள் முன்பு
-
குமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...8 ஆண்டுகள் முன்பு
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...8 ஆண்டுகள் முன்பு
-
Rewarding Life - *"If you want your life to be more rewarding, you have to change the way you think."* * - Oprah Winfrey*11 ஆண்டுகள் முன்பு
-
உன்னுடன் வாழ்கிறேன்.. - அவனது கண்கள் நடைப்பழகாத இரு குழந்தைகள் என்னை காணாத அந்த ஒரு நிமிடம்.. என்னுள் இருக்கும் உன்னோடு சேர்ந்து மிதந்து போகிறேன் மேகமாய்.. என்னுடன் நான் உணர்...12 ஆண்டுகள் முன்பு
-
-
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக